கள்ளு.
=====
கள்ளுண்ணாமை யில் என்னதான் தலைவர் வள்ளுவர் வருந்தி வருந்தி எழுதியிருந்தாலும் ... கேட்டவுடன் சற்று நாவிலும், மனதிலும் இனிக்கும் வார்த்தை இது. நாக்கு அந்த பழைய ருசியை தேடுகிறது.. மனமோ அந்த பழைய வயதை உணர்கிறது......A kind of Time Machine… which takes me to the time when I lived. Really.
கள்ளு.. .. வெண்ணிற திரவம்... பார்க்க பால் போலவும் இருக்கும்... நிறைந்த புளிப்பு சுவையுடன் இருக்கும், சற்று இனிப்பும் இருக்கும்.. மேலும் துவர்க்கவும் செய்யும் ( எதாவது ஒரு சுவையை சொல்லுப்பா !! ) ... இதன் சுவையை.. பெண்ணுடன் சில சமயங்களில் ஒப்பிடுவார்கள்..
இரண்டுமே போதை தரக்கூடியவை.
தென்னம்/ பனை பாளையின் குருத்தை சீவி அதில் வடியும் நீரை கலையத்தில் பிடித்தால் - அது - கள். காலை, மாலை இரு வேளைகளில் மரத்திலிருந்து இறக்குவார்கள். மனிதர்களை போலவே ஒவ்வொரு மரமும் அதனதன் தனி சுவையை கொண்டிருக்கும். சில மரத்து கள்ளை மட்டும் குடிக்க வென்றே சில பேர் இருப்பார்கள்.
இயற்கையின் கருணையோ. என்னவோ.. பொதுவாக கள் இளவேனில் மற்றும் முதுவேனில் காலங்களில் மட்டுமே கிடைக்கும். வயர்வெளிகளில் நெற்கதிர் அறுப்பு கால சமயங்களில் கோடையின் வெம்மையினை தவிர்ப்பதில் உழைக்கும் வர்க்கத்தினிடையே கள்ளுவின் பயன் மிக அதிகம். அப்போது இயந்திரங்களின் பயன்பாடுகள் இல்லாத காலம். காலையில் ஒரு குண்டான் ( !!) நிறைய கள்ளையோ / நீராகாரத்தையோ குடித்துவிட்டு அதிகாலையில் வயலில் இறங்கினால்.. பதினோரு மணி வாக்கில் வேலையை முடித்துவிட்டு கரையேறும் வரை வெயிலே உரைக்காது. என்ன மாதிரி ஒரு அனுபவம் அது.
அகநானூற்றில் ஒரு வரி வருகிறது.. “செந்நெல் வினைஞர் கள் கொண்டு மருகும் சாகாடு” சாகாடு .. என்றால் வண்டியாம்... ஒரு வண்டி நிறைய கள் போகிறதாம் ...செந்நெல் விளைவிக்கும் உழவர்களுக்காக..
அப்போது நாங்கள் இருந்தது விடலை பருவம். எதையும் வெல்ல துடிக்கும் இளஇரத்தம் ; கிராமத்தின் எல்லா மூலைகளிலும் / தோட்டங்களிலும் உள்ள கள் இறக்கும் இடங்களில் எல்லாம் எங்களுக்கு "Account" உண்டு. மேலும் Professional கள்ளு கடைகளுக்கு செல்ல முடியாத பதின்ம வயது. ( அப்போல்லாம் ரொம்ப பயப்படுவோம் சார் ! வெளில தெரிஞ்சா ! அவ்வோளோதான். அதுவுமில்லாமல் நம்ம சொந்தக்காரங்க ஆங்காங்கே, அப்பப்போ, அங்குமிங்கும் உலாவுவார்கள் ..முக்கியமாய் சில இடங்களில் நமக்கு முன் அவர்கள் அங்கே உட்கார்ந்திருப்பார்கள் ..ஸ்ஸ்பப்ப்பாடா !! அவர்கள் கண்ணிலிருந்து மாட்டாமல் தப்பிப்பது ஒரு ஆக சிறந்த ஒரு disguising act .. . மாறுவேட போட்டி… நிறைய இருக்கு... சொல்றேன் …சொல்றேன்)
கள்ளுக்கு தொட்டுக்க என்ன கிடைக்கும் ? அப்போதெல்லாம் சிக்கன் என்ற வஸ்து அல்லது பொருள் அறிமுக படுத்த படாத காலம். வயல்களில் நீர் குறையும் காலம் என்பதால் மீன் மற்றும் நண்டு மட்டுமே பிரதான “Side Dish”… மற்றும் அவித்த கடலை, பனங்கிழங்குகள். மீன்கள் என்றால் அதுவும் குளத்து/ஆற்று மீன்கள்.. குரவை, கெண்டை, கெளுத்தி மற்றும் சில.. நான் அந்த பக்கம் திரும்புவதில்லை என்பதால்..எனக்கு பிடித்தது அங்கு மட்டுமே கிடைக்கும் ஸ்பெஷல் பச்சை மிளகாய். அந்த பச்சை மிளகாய்களை அவர்கள் எலுமிச்சை சாற்றோடு ஊற வைத்திருப்பார்கள்.. உப்பு சற்று தூக்கலாக இருக்கும்.. மற்றோன்று மோர் மிளகாய்... அதே மிளகாய்.. எண்ணையில் வறுத்து எடுத்தது.
சற்றே உங்கள் நாவில் இந்த சுவைகளை கொண்டு வாருங்கள்... புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு, உறைப்பு மற்றும் உப்பு.. அறுசுவையில் ஒன்று குறைகிறது.. கசப்பு.. கள்ளில் நான் கசப்பை கண்டதில்லை. அது என்னவோ.
நண்பர் காரவேல் சொல்லுவார்... வாந்தி எடுக்கும்போது கசப்பா வரும் மாப்பிள… !!!
பண்டைய காலத்தில் ... போதையை ரசித்து, உணர்ந்து, மகிழ்ந்து வாழ்ந்தவர் நாம் போலும். புறநானூற்றில்... அந்த தமிழ் கிழவி என்னமாய் எழுதியிருக்கிறாள்.
அதியமான் இறந்து விட்டான் ; ஒளவை பாடுகிறார்...
====
கொஞ்சம் குறைவான கள் கிடைத்தால் அவன் அதை எனக்கு கொடுத்து விடுவான்...அதிகமான கள் கிடைத்தால் எனக்கும் கொடுத்து... என்னை பாட சொல்லி அவனும் அந்த போதையிலே மகிழ்வான்.. சிறிது சோறாக இருந்தாலும் பலருடன் சேர்ந்து உண்பான். சோறு அதிகமாக இருந்தாலும் அப்படியே.
எல்லாம் போய்விட்டது. எலும்புடன் நிறைய கறி சேர்ந்திருக்கும் கறியை எங்களுக்குத் தருவான். போர் என்றால் தான் மட்டும் சென்று துணிவாய் எதிர்கொள்வான்.
====
என்னவொரு மன்னன் அவன் ... எத்தனயோ நூற்றாண்டு கடந்து என்னால் ரசிக்க முடிகிறது என்றால்.. இங்கு போதை கள்ளா, தமிழா, கவியா ?

சிறிய கட் பெறினே எமக்கீயும் மன்னே
பெரியகட் பெறினே
யாம் பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே
சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே
பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே
என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும் மன்னே
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான் நிற்கும் மன்னே